தலைக்கவசம் அணியா காவலர்கள் மீது உடனடி நடவடிக்கை...
இருசக்கர வாகனத்தில், தலைக்கவசம் அணிந்து செல்லாத காவலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி சட்டம், ஒழுங்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்!
இருசக்கர வாகனத்தில், தலைக்கவசம் அணிந்து செல்லாத காவலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி சட்டம், ஒழுங்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்!
இதுதொடர்பாக அவர் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு அனுப்பிய அறிக்கையில், இரு சக்கர வாகனத்தில் சீருடை மற்றும் சாதாரண உடையில் செல்லும் காவலர்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
தலைக்கவசம் அணியாமல், காவலர்கள் யாரேனும் இருசக்கர வாகனத்தில் பயணித்தாலோ அல்லது போக்குவரத்து விதிகளை மீறினாலோ, சாதாரண மக்களுக்கு விதிக்கப்படும் அபராத நடவடிக்கையை காவலர்களுக்கும் விதிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிரப்பித்துள்ளார். மேலும் இந்த உத்தரவு உடனடியாக பின்பற்றப்பட்டதை உறுதிசெய்யும்படியும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்த மத்திய அரசு இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவது கட்டாயம் என்று அறிவித்தது. அதன்படி தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் இருசக்கர ஓட்டிகள் ஹெல்மட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. எனினும் பல மாநிலங்களில் கட்டாய ஹெல்மட் சட்டம் சரிவர பின்பற்றப் படுவதில்லை.
பொதுமக்கள் மட்டும் அல்லாது, சட்டத்தை காப்பாற்ற வேண்டிய காவலர்களும் சாலை விதிகளை மதிக்காமல் நடந்துக்கொள்வது மேலும் வேதனைக்குறியது. இந்நிலையில் ஹெல்மட் அணியா வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் விதித்து பல மாநில அரசுகள் கட்டாய ஹெல்மெட் விதியை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இந்த விதியை கட்டாயப்படுத்தும் நடவடிக்கைக்கு முதற்கட்டமாக இருசக்கர வாகனத்தில், தலைக்கவசம் அணிந்து செல்லாத காவலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி சட்டம், ஒழுங்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.