சென்னை: மெரினாவில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் இன்று காலை திடீரென காவலர் ஒருவர் பங்கேற்றார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். காவலர் போலீஸ் சீருடையிலேயே போராட்டத்தில் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெரினாவில் இன்று நான்காவது நாளாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று உலக அளவில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. 


இன்று திடீரென மெரினாவில் பாதுகாப்பிறகு காவல்துறை உடையில் இருந்த காவல்துறைகாரர் ஒருவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உரையாற்றினார். இவர் திடீரென மைக் பிடித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, விவசாயத்துக்கு ஆதரவாக பேசினார். 


''இது ஒரு துவக்கம்தான். இன்னும் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசுவதால் எனக்கு எந்த பயமும் இல்லை. காவல்துறையில் இருக்கும் எங்களுக்கும் உணர்வு இருக்கிறது. 


உயரதிகாரிகள் கொடுத்த பிரஷ்ஷாரால் தற்போது இந்த காவல்துறைகாரர்கள் என்னை கூப்பிடுகின்றனர். என் சொந்த ஊர் மதுரை. தமிழ்நாட்டில் இல்லாமல் நாங்கள் எங்கு பஞ்சம் பிழைக்க செல்வது. ஜல்லிக்கட்டு வெற்றி பெறும். இனி அடுத்தது மண் கொள்ளையை நாம் தடுக்க வேண்டும் '' என்று உணர்வுபூர்வமாக பேசியது அங்கு இருந்த இளைஞர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றார் அந்த காவல்துறை அதிகாரி.