தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் குணமடைந்து இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுமுழுவதும் கொரோனா பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வரும் செய்திகளும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் இருவரும், தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்திருப்பதாக அமைச்சர் விஷயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்கள் படி மீட்கப்பட்ட நபர், டெல்லியில் இருந்து தொற்றோடு தமிழகம் வந்தவர் எனவும், சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் தெரிகிறது. மேலும் வரும் இரண்டு நாட்களில் அவர் விடுவிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



முன்னதாக தமழிகத்தின் முதல் கொரோனா வழக்கான காஞ்சிபுரம் நபர் சமீபத்தில் குணம் பெற்று வீடு திரும்பிய நிலையில், தற்போது டெல்லியை சேர்ந்த நபர் குணம்பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து இருவர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போதைய நிலைமைப்படி தமிழகத்தில் இதுவரை 23 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் மதுரையை சேர்ந்த 54 வயது நபர் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி பலியானார். மற்றும் காஞ்சிபுரம் மற்றும் டெல்லியை சேர்ந்த இரு நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் 20 வழக்குகள் கண்காணிப்பில் உள்ளது.


இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது., "தமிழகத்தில் இரண்டாது கொரோனா தொற்று பெற்ற நபர் குணம்பெற்றுள்ளார். டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் கொரோனா தொற்றால் சென்னை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நன்றாக குணமடைந்துள்ளார். கொரோனா அறிகுறி குறித்து கண்டறிய அவருக்கு 2 சோதனைகள் நடத்தப்பட்டது. இரு சோதனைகளும் எதிர்மறையான முடிவினை அளித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என குறிப்பிட்டுள்ளார்.