தற்போது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக உள்ள ஏ.எஸ். கிரண் குமாரின் பதவி காலம் நாளையுடன் (மூன்றாண்டு) முடிவடைகிறது. இதனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவரை நியமிக்க நியமன கமிட்டி அமைக்கபட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இஸ்ரோ புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கே. சிவன் நியமனத்திற்கு கேபினட் நியமன கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதயனைடுத்து கே. சிவனை இஸ்ரோ புதிய தலைவராக நியமித்தது மத்திய அரசு உத்தரவிட்டது. இவர் மூன்றாண்டு காலம் பதவி வகிப்பார். தற்போது திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக கே. சிவன் உள்ளார்.


கே. சிவன் அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல், இந்திய அறிவியல் நிறுவனத்தில் முதுகலை பொறியியல் முடித்துள்ளார். 2006-ம் ஆண்டு மும்பை ஐ.ஐ.டி.யில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இஸ்ரோவில் 1982-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார் இவர் பல்வேறு திட்டங்களில் திறம்பட பணியாற்றியுள்ளார்.


தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.