வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி உயர்வை 100% இருந்து 50% ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டில் இருந்து சொத்து வரி உயர்த்தப்படாமல் உள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெருமளவில் வருவாய் இழப்பை சந்தித்து வந்தது. இது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சொத்து வரியை மாற்றியமைப்பது குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. 


இந்நிலையில், தற்போது வசூலிக்கப்படும் சொத்து வரியில், பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதத்திற்கு மிகாமல் சொத்து வரி வசூலிக்கப்படும் என கடந்த ஜூலை 23 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இதை தொடர்ந்து, தமிழக அரசு சார்பாக புதிய சொத்து வரி தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மூன்று விதமாக பிரித்து இந்த சொத்து வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி குடியிருப்பு பகுதி, வாடகை குடியிருப்பு பகுதி மற்றும் குடியிருப்பு இல்லாத பகுதி என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, தற்போது வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி உயர்வை 100% இருந்து 50% ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து, சொத்துவரி சீராய்வு என்பது 2018-19 முதலாம் அரையாண்டு முதல் மட்டுமே அமல் என்றும், சொத்துவரி உயர்வு தொடர்பான அரசாணை முன் தேதி-யிட்டு வெளியிடப்படவில்லை.  


புதிய வரி விகிதத்தின் படி முன் தேதியிட்டு சொத்து வரியை செலுத்த தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது!