விதிகளை மீறி அமைக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி, தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5329 மதுக்கடைகளில் 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் இன்று, ஜூன் 22 ஆம் தேதி முதல் மூடப்படும் என்று அரசாணை  வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த கடைகளை மூடாமல், விதிகள் படி அமைக்கப்பட்டிருந்த கடைகள் மூடப்பட்டுள்ளதாக கூறி, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, மாநகராட்சி பகுதிகளில், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளில் இருந்து 50 மீட்டர் தூரத்திலும்; மற்ற பகுதிகளில் 100 மீட்டர் தூரத்திலும் அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மேகதாது விவகாரத்தில் எடப்பாடி தெரிந்த விஷயத்தை சொல்ல மறுக்கிறார் - முத்தரசன்



ஆனால் இந்த விதிகளை முறையாக பின்பற்றாமல், தங்கள் விருப்பம் போல் மதுக்கடைகளை மூடியுள்ளதாகவும், விதிமீறல் கடைகள் தொடர்ந்து செயல்பட அனுமதித்தது சட்டத்துக்கு புறம்பானது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  விதிகளை மீறி செயல்படும் மதுக்கடைகளை மூடும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.  இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, விதிமீறல் கடைகளை மூடக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்ய முடியும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.


மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவனைகள், கோயில்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகள் குறித்தும் ஆய்வு செய்து, அவற்றையும் அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு உதவ போதை மீட்பு மற்றும் மது நோயாளிகள் மறுவாழ்வு மையங்கள் தமிழகத்தின் அனைத்து தாலுகாவிலும் அரசு சார்பில் அமைக்கப்பட வேண்டும். மதுபோதைக்கு அடிமையாகாத எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.


மேலும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ