தமிழக போக்குவரத்து துறை சுமார் 7, 304 கோடி ரூபாய் நட்டத்தில் இயங்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், நெல்லை, கோவை ஆகிய 6 மண்டலங்கள் இயங்கி வருகின்றன. இவை தவிர சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் ஆகிய இரண்டும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன.


இவற்றில் 22, 203 பேருந்துகள் இயங்கி வருகின்றன. போக்குவரத்து துறை கடும் நெருக்கடியை சந்திக்கவே 6 ஆண்டுகளுக்கு முன்னர் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இருப்பினும் அரசு போக்குவரத்து கழகமானது தற்போது 7, 304 கோடி ரூபாய் நட்டத்தில் இயங்கி வருவதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2017 - 18-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 2, 109 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் வாங்கிய கடன் தொகை 2,400 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


மீண்டும் நட்டத்தில் இயங்கி வரும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் நஷ்டத்தை ஈடுக்கட்ட, பேருந்து கட்டணம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.