தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில் வாக்களிப்போருக்கான தமிழ்நாட்டைச் சார்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முத்தவல்லிகள் பிரிவுகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, 30.08.2017 அன்று வெளியிடப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவ்வாக்காளர் பட்டியல் தேர்தல் அதிகாரி மற்றும் அரசுச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், கப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாமக்கல் கவிஞர் மாளிகை, இரண்டாவது தளம், தலைமைச் செயலகம், சென்னை-600 009, முதன்மைச் செயல் அலுவலர், தமிழ்நாடு வக்ஃபு வாரியம், சென்னை-600 001 மற்றும் அனைத்து மண்டல வக்ஃபு கண்காணிப்பாளர்களின் அலுவலகங்களில் வெளியிடப்படுகிறது.


2. தேர்தல் நடத்துவதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். தேர்தல் பற்றிய அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் தேர்தல் அதிகாரியால் வெளியிடப்படும்.