தஞ்சாவூர் அருகே அமைந்துள்ள களிமேடு கிராமத்தில் பிரபல அப்பர் கோலிலில் 94வது ஆண்டு சித்திரை திருவிழா நடைப்பெற்றது. அதையொட்டி அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை வரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அலங்கரிக்கப்பட்ட தேரானது தஞ்சை களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக ஊர்வலம் கொண்டுவரப்பட்டது.


இதற்கிடையில், இன்று அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலை பகுதிக்கு தேர் இழுத்து வரப்பட்டது. அப்போது உயர்மின் அழுத்த கம்பி மீது தேர் உரச நேர்ந்தது. இதனால் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது. 


அப்போது தேரினை பிடித்து இருந்த, தேரின் அருகினில் இருந்த மக்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த மின்சார விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் பலத்த  காயமடைந்தனர்.


இதனை தொடர்ந்து காயமடைந்த அனைவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது


இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது.


மேலும் படிக்க | Tamil Nadu Temple Chariot: தேரில் மின்சாரம் பாய்ந்து 12 பேர் பலி! தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி



இதனிடையே, மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை சென்றடைந்தார். இதன் பின்னர் சாலை மார்க்கமாக தஞ்சாவூர் சென்றடைந்த முதலமைச்சர் விபத்து நிகழ்ந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து முதலாவதாக விபத்தில் உயிரிழந்த 15 வயது சிறுவன் சந்தோஷின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார். 



அதன் பின் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் இல்லத்திற்கும் சென்று ஆறுதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். விபத்தில் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, திமுக எம்.பி டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர். 


மேலும் படிக்க | Thanjavur Temple Chariot: உயிரிழந்தவருக்கு பேரவையில் இரங்கல்; 2 நிமிட மௌன அஞ்சலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR