குடிமகன்களுக்கு குட்நியூஸ்! டாஸ்மாக் கடைகளில் ஜிபே, போன் பே நாளை முதல் அறிமுகம்
TASMAC | டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அறிமுகமாகவுள்ளது.
TASMAC Big Updates Tamil | டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாளை முதல் அறிமுகமாகிறது. குவாட்டர், பீர் உள்ளிட்ட மது வகைகளுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் இந்த பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. முதல் கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருக்கும் சுமார் 220 கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. குடிமகன்கள் நேரடியாக ஜிபே, கூகுள் பே மூலம் கியூஆர் கோடு ஸ்கேன் செய்து டாஸ்மாக் நிர்வாகத்துக்கே பணம் செலுத்தலாம். சோதனை முறையில் அறிமுகமாகும் இந்த திட்டம் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 14 ஆம் தேதி) முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த திட்டம் அமலாகும் தேதி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, நவம்பர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமலாகிறது. இருப்பில் இருக்கும் மதுபாட்டில்களின் விற்பனையை முடித்தபிறகு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் புதிய விற்பனையை தொடங்குமாறு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தலை கொடுத்திருக்கிறது. வெள்ளிக்கிழமை முதல் இந்த இரு மாவட்டங்களைச் சேர்ந்த குடிமகன்கள் பாட்டில்களுக்கான உரிய தொகை செலுத்தி மது வகைகளை வாங்கிக் செல்லலாம். கூடுதல் விற்பனை செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஏன்?
டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனைகளில் பெரும் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. கணக்கில் வராத, மோசடி மது வகைகளை வைத்து டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், அதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அத்துடன் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுவகைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ஊழியர்கள் வசூலிப்பதாகவும் பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்புபடுத்தியும் முறைகேடு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகத்தில் மாற்றத்தை கொண்டுவர முதலமைச்சர் உள்ளிட்ட உயரதிகாரிகள் முடிவு செய்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கிரீன் சிக்னல்
சிறையில் இருந்து வெளியே வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியும் இந்த திட்டத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார். அதனடிப்படையில் டிஜிடிட்டல் பணப்பரிவர்த்தனை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அனைத்து மதுக்கடைகளுக்கும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட இருக்கிறது. நாளுக்கு நாள் டாஸ்மாக் விற்பனை அப்டேட்டும் வெளிப்படையாக அரசுக்கு தெரியவரும் என நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | மகளிர் உரிமை தொகை இவர்களுக்கெல்லாம் ரூ.1000 கிடைக்காது - லிஸ்ட் இதோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ