சென்னை: தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு மீது தனது நியாயமான கோபத்தை காட்டியதோடு, அம்மாவின் அரசு எனக்கூறி கொள்ளும் தற்போதைய அதிமுக அரசின் திட்டம் இனப்படுகொலைக்கு ஒப்பானது என தமிழக அரசை கடுமையாக சாடினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்றுநோயை எதிர்த்து தமிழகம் தொடர்ந்து போராடி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் டாஸ்மாக் விற்பனை நிலையங்களை திறக்கும் அரசின் முடிவை கமல்ஹாசன் சாட்டியுள்ளார்


வியாழக்கிழமை மட்டும், டாஸ்மாக் ரூ .170 கோடி மதிப்புள்ள 20 லட்சம் லிட்டர் ஆல்கஹால் விற்றது, பெரும்பாலான மாவட்டங்களில் எந்தவிதமான உடல் ரீதியான சமூக தூரமும் பின்பற்றப்படவில்லை. மதுபானம் வாங்குவதற்காக வரிசையில் நின்றபோது ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் இருந்த பல போட்டோக்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. 


இதனையடுத்து நேற்று (வியாழக்கிழமை) இந்த மோசமான சம்பவத்தை அடுத்து, தனது அறிக்கையில், நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், "அரசின் கையாளாகாத தனத்தை திசைதிருப்பே மதுபான கடைகள் திறக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கை..,