தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சில நாட்களாக குறைந்து வருவதால், ஊரடங்கு உத்தரவில் தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பதாக நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin)  அறிவித்துள்ளார். இருப்பினும் இந்த ஊரடங்கு நீட்டிப்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தளர்வுகளின் ஒரு பகுதியாக, தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து தொற்று குறைந்து வரும் எஞ்சிய 27 மாவட்டங்களில் டாஸ்மாக் (TASMAC) கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.


ALSO READ | தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்; யாருக்கு இ-பாஸ் அவசியம்.. விபரம் உள்ளே


இந்த முடிவுக்கு தமிழக பாஜக மற்றும் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் போது டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பி கனிமொழி, தற்போதைய திமுக அரசின் அறிவிப்பிற்கு ஏன் மவுனம் காக்கிறார் என்று தமிழக பாஜக (BJP) எம்எல்ஏ வானதி சீனிவாசன் (Vanathi Srinivasan) கேள்வி எழுப்பியுள்ளார். 


இந்நிலையில் இன்று மேட்டூர் அணையை திறந்து வைத்த பேசிய முதல்வரிடம் டாஸ்மாக் கடைகள் திறக்க உத்தரவிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் முதல்வர் மு.க ஸ்டாலின், கொரோனா குறைந்துள்ளதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் டாஸ்மாக் கடையை திறக்க உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.


மேலும் பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த மு.க ஸ்டாலின்,வரும் 17ஆம் தேதி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


ALSO READ | TN COVID-19 Update: 16,000-க்கு கீழ் இறங்கியது ஒரு நாள் தொற்றின் அளவு, 378 பேர் உயிர் இழப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR