தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களும் கொரோனா பரவலின் அடிப்படையில் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது அறிவிக்கபட்டுள்ள ஊரடங்கில் (TN Lockdown) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் துணிக் கடைகள் வணிக வளாகங்கள், நகைக்கடைகளையும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தொற்று குறையாத 11 மாவட்டங்களைத் தவிர மற்ற பகுதிகளில் உடற்பயிற்சிக் கூடங்கள் 50 சதவிகித நபர்களுடன் வழக்கமான நேரத்தில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ALSO READ | TN Lockdown: ஜூலை 5 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: மு.க. ஸ்டாலின்


வகை 1 - (11 மாவட்டங்கள்)
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்.


வகை 2 - (23 மாவட்டங்கள்)
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.


வகை 3 - (4 மாவட்டங்கள்)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்.


இதற்கிடையில் 27 மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்படலாம் எனவும் தொற்று குறையாத கோவை, நீலகிரி,ஈரோடு, சேலம், கரூர், நாகை, திருச்சி, தஞ்சை, திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் டாஸ்மாக் (Tasmac) கடைகளை திறக்க அனுமதியில்லை எனவும் அறிவித்துள்ளது.


ALSO READ | COVID-19 Update: தமிழகத்தில் இன்று 5,755 பேர் பாதிப்பு, 150 பேர் உயிர் இழப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR