கொரோனா பரிசோதனைக்காக 40,032 PCR கருவிகளை தமிழக அரசுக்கு வழங்கியது டாடா நிறுவனம்..!
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 PCR கருவிகளை அரசுக்கு வழங்கியது டாடா நிறுவனம்!!
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 PCR கருவிகளை அரசுக்கு வழங்கியது டாடா நிறுவனம்!!
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய தமிழக அரசுக்கு 40,032 PCR கிட் கருவிகளை டாடா நிறுவனம் கொடுத்துள்ளது. சுமார், ரூ.8 கோடி மதிப்புள்ள கருவிகளை தந்ததற்காக டாடா நிறுவனத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கானா அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மூச்சுத் திணறல் உள்ளவா்கள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ள அனைவருக்குமே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் தற்போது 38,139 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனா். இதுவரை மொத்தம் 15,502 பேருக்கு பரிசோதனை செய்யபட்டுள்ளனர். அவா்களில் 1,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 31 பேருக்கு அந்த பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது, 10 வயதுக்குட்பட்ட 33 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து 81 போ் வீடு திரும்பியுள்ளனா். பூரண குணமடைந்தவா்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தைப் பொருத்தவரை இதுவரை 12 போ் கொரோனாவால் உயிரிழந்துள்ளனா். சுமார், 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்காக ரூ. 8 கோடி மதிப்புள்ள 40 ஆயிரத்து 32 பிசிஆர் கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்நிலையில், ரூ. 8 கோடி மதிப்புள்ள 40 ஆயிரத்து 32 PCR கருவிகளை வழங்கியுள்ள டாடா நிறுவனத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.