சேலத்தில் சோகம்! மது பிரிப்பதில் தகராறு; நண்பனை மதுபாட்டிலால் குத்திக்கொலை!
டாஸ்மாக் கடையில் மது வாங்கி பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், தன் நண்பனை மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்த வாலிபர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.
சேலம் அன்னதானப்பட்டி சண்முகநகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35) கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் ஜெயக்குமார் (40) மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார். இருவரும் ஒன்று சேர்ந்து வேலுநகர் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தும்போது மதுபிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது ஜெயக்குமார் மதுவை கூடுதலாக குடித்ததால் கோவிந்தராஜ் தாக்கியுள்ளார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் ஜெயக்குமார் மதுபாட்டிலை எடுத்து கழுத்தில் குத்தியதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த அன்னதானப்பட்டி காவல்துறையினர் கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை செய்த ஜெயக்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்களுக்கு இடையே மது பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள் தினந்தோறும் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR