காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகே பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட கழகம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி சார்பில் அதிமுக மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக கழக மகளிர் அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி பங்கேற்று பேரறிஞர் அண்ணா அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்து திமுக ஆட்சியின் அவல நிலை குறித்து பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இன்றைய நாளிதழ் செய்தியில், தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஐந்து ஆடுகளை திமுகவினர் டாடா சுமோவில் திமுக கொடி போட்டு வந்து திருடிச் சென்றதாக செய்தி வந்திருப்பதாகவும், பிரியாணி போய் ஓசியில் திமுகவினர் கேட்டதாகவும், கேக்கடையில் கேக்  கேட்டதாகவும், சாராயம் ஓசியில் கேட்டதாகவும், டீ ஓசியில் கேட்டதாகவும், எல்லாத்தையும் ஓசியில் கேட்டதாகவும், தற்போது வாய் இல்லாத ஜீவன் ஆடுகளை திருடியதாகவும் அதற்கு வாய் இருந்தால் அதை வெட்டுவதற்கு பதிலாக திருட வந்த திமுகவினரை வெட்டி இருக்கும் என உரையாற்றினார். எனவே மறந்தும் கூட நீங்கள் திமுகவினருக்கு வாக்களிக்க வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சிறுவன் மீது மது போதையில் தாக்குதல்... தலைமறைவான பாடகர் மனோவின் மகன்கள் - நடந்தது என்ன?


மேலும் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு முதலமைச்சர் சென்றதாக கூறப்படும் நிலையில் இரண்டே நாள் சிக்காகோவிலில் இருந்து 9 பேரை அமர வைத்து போட்டோ சூட் நடைபெற்றதாகவும், பின்னாடி இருந்த டி.ஆர்.பி ராஜா அவர்கள் கட் எனக் கூறியதும் கட் ஆகிவிட்டதாகவும், ஒரு புத்தகம் கொடுத்ததாகவும், அதனுடன் அது முடிந்து விட்டதாகவும், முதலமைச்சர் இரண்டு மருத்துவத்திற்காக சென்று விட்டு தொழில் முதலிடு ஈர்ப்பதற்காக சென்றுள்ளதாக கூறுவதாகவும்,இங்கே இருக்கின்ற போர்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்கு ஏன் அமெரிக்கா செல்ல வேண்டும், கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கு  இங்கேயே ஒப்பந்தத்தை போட்டு இருக்கலாமே, ஏன் அமெரிக்கா சென்று  போட வேண்டும், அருகில் இருக்கின்ற 
தெலுங்கானா முதலமைச்சர் அமெரிக்காவுக்கு சென்றது ஏழு நாள் தான்.


அவர் ஈர்த்து வந்த முதலீடு 32 ஆயிரம் கோடி, ஆந்திராவில் சித்தாராமையா முதலமைச்சர், அவர் போகாமல் அம்மாநிலத்தின் தொழில் வளத்துறை அமைச்சர் 9 நாள் வெளிநாடுகளுக்குச் சென்று ஈர்த்து வந்த முதலீடு 29 ஆயிரம் கோடி, தமிழக முதலமைச்சர் 17 நாள் அமெரிக்கா சென்று வெறும் 7000 கோடி முதலீடு ஈர்த்ததாகவும் புதிய முதலீடு எதுவும் வரவில்லை பழைய தொழில் தான் ,மூடப்பட்ட தொழிலை திறப்பதாக ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், ஏமாற்றுவதில் ஒன்றாம் நம்பர் மோடி மஸ்தான் யார் என்றால் இந்த திமுக காரர்கள் தான், மேலும் தாய்மார்களிடம் திமுக அவர்கள் ஆயிரம் ரூபாய் தருவதாக நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் கூறியதாகவும், அவர்கள் கொடுப்பது ஆயிரம் ரூபாய் தான் ஆனால் பூண்டின் விலை 400 ரூபாயாக உயர்ந்து விட்டதாகவும், மின்சார விலை உயர்த்தி விட்டதாகவும் அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர்த்தி விட்டதாகவும் ஆவேசமாக பேசினார்.


முன்னதாக பேசிய முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், நிதியமைச்சராக இருந்த பழனிவேல் ராஜன் அவர்கள் பேசுகையில் தமிழ்நாட்டில் திமுகவின் சபரீசன் மற்றும் உதயநிதி ஆகியோரிடம் 30 ஆயிரம் கோடி பணம் இருப்பதாகவும் 30 ஆயிரம் கோடியை என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் 30 ஆயிரம் கோடி போனதில் 7,116 தான் திரும்பவும் வந்திருப்பதாகவும் மீதி பணம் எப்போது வரும் என தெரியவில்லை என்றும் முதலமைச்சர் அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டுவதை பார்க்கிறோம் அதுதான் உலக அதிசயம் என்றும், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டி அமெரிக்காவிலிருந்து தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளதாக உரையாற்றினார். இந் நிகழ்ச்சியில் அதிமுக தலைமை கழக செயலாளர் பி.கிருஷ்ணன், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே.பழனி, மாவட்ட அவை தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாநில கலைப்பிரிவு துணை செயலாளர் டில்லிபாபு மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மகளிர் அணியினர் பங்கேற்றனர்.


மேலும் படிக்க | சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ