’அண்ணன் ஸ்டாலின்’ திட்டத்தை வரவேற்கிறேன் - நெகிழும் தமிழிசை சௌந்தரராஜன்
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று அண்ணன் ஸ்டாலின் கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன் என தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் வடக்கன் குளம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு தெலுங்கானா ஆளூநர் தமிழிசை சௌந்திரராஜன் வந்திருந்தார். அப்போது போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பின்பு வடக்கன் குளம் அதிசய விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர் . பின்பு தான் படித்த நேரு மேல்நிலை பள்ளிக்கு சென்று பள்ளிக் குழந்தைகளுடன் அமர்ந்து கலந்துரையாடினார்.
மேலும் படிக்க | தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். "திராவிட மாடல் மீது உள்ள அதிருப்பதியில் தான் பேசுவதாக அமைச்சர் சேகர்பாபு பேசியிருகிறார். திராவிட மாடலில் தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்பது எப்படி அதிருப்தியாகும். தமிழ் தமிழர்களுக்காக உழைக்கிறோம் என்பதனாலே ஒரு சின்ன கோரிக்கை தான். தமிழர்கள் ஆட்சியில் தமிழ் பெயர் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது ஆலோசனை.
இதற்காக என் மீது அம்புகளை ஏவ வேண்டாம் . அண்ணன் ஸ்டாலின் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வையுங்கள் என கூறியிருப்பது பாராட்டுக்குரியது. அரசியலில் குறுக்கு வழியில் வராமல் மக்களுக்காக உழைத்து நேர்மையாக வாருங்கள். வாரிசு அரசியலும் ஒருவகையில் குறுக்குவழிதான்" என கூறினார்.
மேலும் படிக்க | பைரவருக்கு இவ்வளவு பெரிய சிலையா? அப்படி என்ன சிறப்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ