கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவு மிக அதிகமாகவே உள்ளது. இதனால் அங்கு தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் (Edappadi) உள்ள அரசு மருத்துவமனையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அளிக்கப்ப்டும் சிகிச்சை குறித்தும், படுக்கை வசதி குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது.,


ALSO READ | Corona Update: 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.86 லட்சம் பேருக்கு கோவிட் பாதிப்பு


சேலம் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் (Coronavirus) காரணமாக பலர் உயிரிழந்திருக்கின்றனர். அப்பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பிவிட்டன. தமிழக அரசு தொடர்ந்து இறப்பை குறைத்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இறப்பு விவரங்களை வெளிப்படைத்தன்மையோடு வெளியிட வேண்டும். இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. 


எந்தெந்த மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன என்பதை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். சேலம் மாவட்டம் முழுக்க கொரோனாவிற்கு 3,800 படுக்கைள் மட்டுமே உள்ள நிலையில் 11,700 என தவறான எண்ணிக்கையை வழங்குகின்றனர். மேலும் தற்போது ஆம்புலன்ஸில் காத்திருந்து உயிரிழப்பவர்களை முறையாக உரிய கவர்களை கொண்டு மூடப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சடலங்கள் பல மணி நேரம் காத்திருந்து அடக்கம் செய்ய வேண்டியுள்ள நிலையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR