கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள அருள்மிகு ஸ்ரீ வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் இருந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இக்கோவிலில் அமாவாசை உள்ளிட்ட முக்கிய விசேஷ தினங்களில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். அதேபோல் ஆடிக்குண்டம் திருவிழா இக்கோவிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.


இக்கோவிலுக்கென தேக்கம்பட்டி கிராமத்தில் 14.39 ஏக்கர் கோவில் நிலம் (Temple Land) சொந்தமாக இருந்து வந்தது. இக்கோவிலின் முன்னாள் பூசாரி தங்கவேல் என்பவர் கோவில் நிலத்தில் 3.30 ஏக்கர் நிலத்தை தனக்கே உரிமையானது என சொந்தம் கொண்டாடி வந்ததோடு, கோவை மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் 1992 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பு தங்கவேலுவிற்கு சாதகமாக அமைந்தது.


இதனை எதிர்த்து கோவில் சார்பில் கோவை சப் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு கோவிலுக்கு சாதகமாக வந்தது.


Read Also | 1600 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு


மேலும், பூசாரி தங்கவேல் இறந்து விட்டதால் அவரது மகன்களான மைனர்களாக இருந்த மோகன்ராஜ், காளிமுத்து உள்ளிட்டோரின் காப்பாளர் என்ற முறையில் சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றார். வழக்கு நடைபெற்று வந்த நிலையில் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து கோவிலுக்கு சாதகமாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


இந்நிலையில் சுமார் 8 கோடி மதிப்பிலான 3.30 ஏக்கர் மதிப்பிலான இந்த நிலமானது இன்று போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் ஷர்மிளா,வன பத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஹர்ஷினி முன்னிலையில் மீட்கப்பட்டது.


அந்த நிலத்தில் மரங்களை மட்டும் விட்டு விட்டு ஓட்டு வீடுகள்,செடிகள் உள்ளிட்டவை முழுவதுமாக அகற்றப்பட்டு அவ்விடத்தில் இது கோவிலுக்கு சொந்தமான நிலம்.இந்நிலத்தில் அத்துமீறி யாரும் பிரவேசிக்க கூடாது. மீறினால் நீதிமன்றம் மற்றும் அறநிலையத்துறை சட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விளம்பர பதாகை வைக்கப்பட்டது.


இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள 3.30 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஆன்மீக பெரியோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Also Read | இந்து சமய அறநிலையத்துறை மூலம் கல்லூரி தொடங்க தடை இல்லை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR