அதிமுக எம்.எல்.ஏ தனது மகளை கடத்தி சென்றதாக பகீர் புகார் அளிக்கும் கோயில் அர்ச்சகர்
அ.தி.மு.க எம்.எல்.ஏ பிரபுவால் கடத்திச் செல்லப்பட்ட தனது மகளை மீட்டுத் தரும்படி, கோயில் அர்ச்சகர் பேசிய வீடியோ அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.
அ.தி.மு.க எம்.எல்.ஏ பிரபுவால் கடத்திச் செல்லப்பட்ட தனது மகளை மீட்டுத் தரும்படி, கோயில் அர்ச்சகர் பேசிய வீடியோ அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.
கள்ளக்குறிச்சி தொகுதி தனித் தொகுதியாகும். 38 வயதான பிரபு அந்தத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ ஆவார். பிரபு, தியாகதுருகத்தைச் சேர்ந்த கோயில் குருக்கள் ஒருவரின் 19 வயது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக அந்த பெண்ணின் தந்தையும் தியாகதுருகம் மலையம்மன் கோயிலில் குருக்களாகப் பணிபுரிந்துவரும் சுவாமிநாதன் பேசி வெளியிட்டிருக்கும் வீடியோஅதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ ஆங்கிலம் இரணாமாண்டு படித்து வரும் தனது மகளை எம்.எல்.ஏ பிரபு ஆசைவார்த்தைகள் அக்டோபர் முதல் தேதியன்று கடத்திச் சென்றுவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்
பொருளாதார பலமும், அதிகார பலமும் உள்ள எம்.எல்.ஏ போலீசாரிடம் புகார் கொடுக்க சென்றால், பொண்ணையே கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டுகிறார். 19 வயதான எனது மகளை 38 வயது எம்.எல்.ஏ கடத்தி சென்றுவிட்டார். இது என்ன நியாயம். என் மகளை மீட்டுக் கொடுங்கள் என்று பெண்ணின் தந்தை கைகூப்பி இறைஞ்சும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், தனது பெற்றோர் முன்னிலையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டதாக எம்.எல்.ஏ பிரபு புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.
இதற்கு முன்னதாக 2017ஆம் ஆண்டில் எம்.எல்.ஏ பிரபுவின் குடும்பத்தின் மீது பெண் கடத்தல் வழக்கு பதிவாகியிருந்தது. தனது மனைவி நந்தினையை கள்ளக்குறிச்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ பிரபுவின் தந்தையும், தியாகதுருகம் அ.தி.மு.க ஒன்றிய செயலாளருமான அய்யப்பா கடத்திச் சென்றுவிட்டார்’ என்று வரஞ்சரம் காவல்நிலையத்தில் 2017ஆம் ஆண்டில் சங்கர் என்பவர் புகார் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | நடாசா-க்கு முன் ஹர்திக் பாண்டியா ஜாலியா ஊர் சுற்றிய 6 காதலிகள் யார் தெரியுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR