தமிழ் கட்டாயம் என்ற கொள்கை முடிவு இருந்தாலும் சிறுபான்மை மொழிகளுக்கும் முக்கியத்துவம் தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துரைகளுக்கான பல சலுகைகளையும் திட்டங்களையும் வழங்கி வருகிறார். இந்நிலையில், நேற்று அவர் பள்ளி மாணவர்கள் புத்தகங்களை படிக்க நடமாடும் நூலகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் 15 பாடங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. 


மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார் அமைச்சர் செங்கோட்டையன். 


இதையடுத்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிகளில் சிறுபான்மை மொழிகள் காக்கப்படும்; சிறுபான்மை மொழிக்காக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று கூறினார். 


மேலும் வர பேசுகையில், தமிழ் கட்டாயம் என்ற கொள்கை முடிவு இருந்தாலும் சிறுபான்மை மொழிகளுக்கும் முக்கியத்துவம் தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.