தினகரன் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு, அக்கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுக்குறித்து அறிக்கையை வெளியிட்ட திமுகவின் பொதுசெயலாளர் க.அன்பழகன் கூறியது, திமுக கொள்கை பரப்பு செயலாளர்களாக பணியாற்றி வரும்  திருச்சி சிவா மற்றும் ஆ.ராசா ஆகியோருடன் இணைந்து சட்டதிட்ட விதி 26படி, தங்க தமிழ்ச்செல்வன் கொள்கை பரப்பு செயலாளராக திமுக தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார் என்று அறிக்கையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் திமுகவின் இலக்கிய அணி இணைச் செயலாளர் பொறுப்பில் வி.பி.கலைராஜன் அவர்களும், நெசவாளர் அணிச் செயலாளர் பொறுப்பில் கே.எம். நாகராஜன் அவர்களும் நியமனம் செய்யப்படுகிறார் என்றும் கூறப்பட்டு உள்ளது.