ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக, கே.வி.தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தலில் கேளரா மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்பு மனுவை இன்று ராகுல்காந்தி தாக்கல் செய்கிறார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் பாரத் தர்ம ஜனசேனா வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திரபிரதேசம் அமேதி லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். இரண்டாவதாக வயநாடு லோக்சபா தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என கேரளா காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து இன்று கேரளா வரும் ராகுல், கோழிக்கோட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை வயநாடு சென்று தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறார். 


இந்நிலையில், ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராகத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவை நியமனம் செய்துள்ளனர். 


முன்னதாக நாகர்கோவிலில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியின் பேச்சை தங்கபாலு மொழிபெயர்த்தார். ஆனால் அவர் தவறாக மொழிபெயர்த்ததாக பலரும் விமர்சனம் செய்தனர். இதனையடுத்து தங்கபாலுவின் மொழிபெயர்பை வைத்து பல மீம்ஸ்கள் இன்று வரை உலா வருகிறது.