கட்டண உயர்வு என்று சொல்லே நடுத்தர மக்களுக்கு அலர்ஜி வகையறாதான். இதில்தான் எத்தனை வகை. வகை வகையான கட்டண உயர்வை ஏற்றி மக்கள் மீது தூக்கிவீசும் அரசுகளுக்கு மத்தியில் பொதுமக்கள் செய்வதறியாது புலம்பித் தவிக்கின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டண உயர்வு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தற்போது மின் கட்டண உயர்வு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | திமுகவின் பக்கம் எல்லாவற்றையும் திருப்புகிறாரா எடப்பாடி பழனிச்சாமி ?


நிதி நெருக்கடி காரணமாக உயர்த்தியுள்ளதாக மாநில அரசு சொன்னாலும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "மத்திய அரசு  தமிழ்நாடு மின்சார வாரியம் மிகப்பெரிய கடனில் சிக்கி தவிக்கிறது. நாம் கடனே வாங்க முடியாத அளவுக்கு ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியிருக்கிறது. 


தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை மாற்றி அமைக்காவிட்டால் அவர்களுக்கான கடன் வழங்கக்கூடிய அந்த நிலையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அமைச்சகம், ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியிருக்கிறது. இதனால் எந்த வங்கிகளிலும் கடன் பெற முடியாத ஒரு சூழலுக்கு நாம் ஆளாக்கப்பட்டிருக்கிறோம். அதனால் தான் இந்த முடிவு" என்று விளக்கம் அளித்துள்ளார். 


இந்த விளக்கத்திற்கு கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி விமர்சித்து ஒரு பேட்டியளித்துள்ளார். நாமக்கல்லில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, 


‘மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் முறையாக அறிவிக்காமல் மின்சார கட்டண உயர்வை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படும் வகையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நிர்வாக திறமையின்மையால் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார துறை என்பது சேவைத்துறை, அதில் நஷ்டம் என்பது ஏற்படுவது சாதாரணம் விஷயம் ; ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரத் துறைக்கு வருமான நோக்கத்திற்காக கட்டணத்தை உயர்த்தியுள்ளார். கட்டண உயர்வுக்கு மத்திய அரசு மீது மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீண் பழி சுமத்துகிறார்.’


‘கட்டண உயர்வால் மேற்கு மண்டலத்தில் உள்ள விசைத்தறி தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்படும். எனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு திரும்ப பெற வேண்டும். 
முதல்வர் ஸ்டாலினிடம் நற்பெயர் வாங்குவதற்காக அவசர கதியில் விவசாயிகளுக்கு 1 லட்சம் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஓவர் லோடு காரணமாக பல இடங்களில் மின்மாற்றிகள் பழுதடைந்து வருகிறது.’


மேலும் படிக்க | "இதற்குப் பதில் சொல்வாரா பழனிசாமி? - கேள்விகளை அடுக்கிய ஆர்.எஸ்.பாரதி


‘கடந்த அதிமுக ஆட்சியில் உற்பத்திக்கு அதிக செல்வீனங்கள் ஆகும் என்பதால் உடன்குடி, உப்பூர் மின் உற்பத்தித் திட்டங்கள் கைவிடப்பட்டது. வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் 3 ரூபாய்க்கு கிடைக்கும் போது இத்திட்டத்தை செயல்படுத்தினால் யூனிட்டுக்கு 7 ரூபாய் வரை உற்பத்தி செலவு ஆகும். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன பதில் சொல்லபோகிறார் ?’ 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ