அதை கொஞ்சம் நிறுத்தி போடுங்க... பிரஸ்மீட்டில் செல்போன் ரிங் டோன் கடுப்பான தங்கர் பச்சான்... வேளான்  தனி பட்ஜெட் போட்டால் போதுமா... உழவர் நலன் மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை சீண்டிய பாமக வேட்பாளர் தங்கர் பச்சான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிரணியில் உள்ள குடும்பத்தினர்கள் கூட தன்னை பொது வேட்பாளராக நினைத்து வாக்களிக்க வேண்டும் எனவும், தான் எம்பியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடுவேன் என பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்


கடலூர் பாரதி சாலையில் பாராளுமன்றத் தேர்தல் கட்சி அலுவலகத்தினை தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக  வேட்பாளர் தங்கர் பச்சான் திறந்து வைத்தார். அப்பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் கோடிக்கணக்கில் உள்ளதாகவும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தான் முன்னுரிமை அளிப்பேன், இந்த தேர்தல் வெறும் தேர்தல் அல்ல.. மக்கள் வாழ்வாதார பிரச்சனை என தெரிவித்தார்.


மேலும் படிக்க | ஆம் ஆத்மி காட்சிக்கு தொடரும் சோதனை: முக்கிய கட்சித் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பியது ED


மக்களின் நலனுக்காக மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதாகவும், சென்னை - கடலூருக்கு ரயில், செம்மண்டலம் பகுதியில் மேம்பாலம், உலக சுகாதாரம் நிறுவனம் தடை செய்த அத்தனை தொழிற்சாலையும் சிப்காட்டில் உள்ளது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.


மேலும் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த அவர் எங்கள் ஆன்மீகத்திற்குள் கை வைக்க வேண்டாம், அப்படியென்றால் மக்களை திரட்டி போராடுவேன் எனவும் தங்கர் பச்சான் தெரிவித்தார். என்னை பொது வேட்பாளராக நினைத்து எதிரணியில் உள்ள குடும்பத்தினர்கள் கூட தனக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், தான் என்பியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடுவேன், மக்களின் நிலையைத்தான் கடந்த பல ஆண்டுகளாக திரைப்படமாக எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.


மூன்றாவது முறையாக தொடர்ந்து பாஜக நாட்டை ஆளப்போவதாகவும், பிரதமர் மோடியை எதிர்த்து செயல்படுவதால் மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர் எனக் குறிப்பிட்ட அவர், நான் எழுதிய பல கட்டுரைகளை படித்துவிட்டு அரசியல்வாதிகள் அரசியலுக்கு வாருங்கள் என்றார். இறுதியாக என் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதுதான் ஊடகத்தின் பணி, அதற்கு ஊடகம் தடையாக இருக்க வேண்டாம் எனவும் தங்கர் பச்சான் கேட்டு கொண்டார்


மேலும் படிக்க | ED -யின் அடுத்த பிடி: கேரள முதல்வர் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு


மேலும் படிக்க | 'மக்களவை தேர்தலில் போட்டியிட பணமில்லை...' நிர்மலா சீதாராமன் கூறும் காரணங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ