Nirmala Sitharaman Lok Sabha Election 2024: 18ஆவது மக்களவை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் நாடு முழவதும் நடைபெற உள்ளது. 543 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஏப். 19ஆம் தேதி நடைபெறுகிறது. கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது அன்றே தேர்தல் முடிவுகளும் பெரும்பாலும் தெரிந்துவிடும்.
வாக்கு இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றோடு நிறைவடைந்தது. இன்று முதல் வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாளை மறுதினம் (மார்ச் 30) வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 16ஆம் தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையொட்டி மாநிலம் முழுவதும் சோதனைகளும், பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மட்டுமின்றி பாஜகவும் மூன்றாவதாக ஒரு கூட்டணி அமைத்து அதன்மூலம் இந்த தேர்தலை சந்திக்கிறது. பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழ்நாட்டில் இம்முறை உயரும் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் கணித்துள்ளன. சமீபத்தில் பாஜக தரப்பில் அதன் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியிருந்தது.
அதில் பல்வேறு நட்சத்திர வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர். முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் பாஜக சார்பில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளராக பார்க்கப்படுகின்றனர்.
நிர்மலா சீதாராமன் போட்டியிடாதது ஏன்?
முன்னதாக, தமிழ்நாட்டிலோ அல்லது புதுச்சேரியிலோ மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவதற்கு வாய்ப்பிருப்பதாக தகவல்கள் பரவின. ஆனால், நிர்மலா சீதாராமன் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இது பலருக்கும் ஆச்சர்யத்தை தந்தது. அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தாலும், பாஜக இந்த முறை பலரையும் மக்களவையில் களமிறக்கி உள்ள நிலையில், நிர்மலா சீதாராமனும் அதில் வராதது பலருக்கு வியப்பை தந்தது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊடகம் ஒன்றின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பேசிய அவர்,"ஒரு வாரமோ, பத்து நாளோ யோசித்துவிட்டு, முடிவை சொல்லலாம் என நினைத்திருந்தேந். ஆனால், தேர்தலில் போட்டியிட என்னிடம் அவ்வளவு பணம் இல்லை.
ஆந்திராவில் போட்டியிடுவதோ அல்லது தமிழ்நாட்டில் போட்டியிடுவதா என்ற பிரச்சனையும் எனக்கிருந்தது. இது அவர்கள் பயன்படுத்தும் பல்வேறு வெற்றிக்கான அளவுகோல்களின் கேள்வியாகவும் இருக்கும். நீங்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவரா அல்லது அந்த மதத்தைச் சார்ந்தவரா? நீங்கள் இந்த இடத்தில் இருந்து வந்தவரா? என பல அளவுகோள்கள் இருக்கும். என்னால் அதை செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை,
எனது வாதத்தை அவர்கள் (பாஜக தலைமை) ஏற்றுக்கொண்டதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவராக இருக்கிறேன். அதனால் நான் போட்டியிடவில்லை. எனது சம்பளம், எனது வருமானம், எனது சேமிப்பு என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியல்ல" என்றும் அவர் கூறினார். பாஜக தலைமை நிர்மலா சீதாராமனுக்கு ஆந்திர மற்றும் தமிழ்நாட்டில் வாய்ப்பளித்திருந்ததாகவும், அதனை அவர் மறுத்தவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் பாஜக வேட்பாளர்களுக்கு பரப்புரை பணியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் படிக்க | ED -யின் அடுத்த பிடி: கேரள முதல்வர் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ