உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். புதுக்கோட்டையில் பேசிய அவர், என்னை மூன்றாம் கலைஞர் என்று அழைக்காதீர்கள். என்னை சின்னவர் என்று அழையுங்கள் என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது இந்தப் பேச்சு தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி சின்னவர் என்று அழைக்க சொல்வதன் மூலம் உதயநிதி தன்னை ஒரு முதலாளி என்ற தொனியில் அழைக்க சொல்கிறாரா என்ற கேள்வியும் பலரிடம் எழுந்திருக்கிறது.



இந்தச் சூழலில் தஞ்சைக்கு சென்ற அவரை சந்தித்த தஞ்சாவூர் மேயர் சண் ராமநாதன் உதயநிதியின் காலில் விழுந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது.


இதனையடுத்து  தஞ்சாவூர் மேயர் சண் ராமநாதனை ஜீ தமிழ் நியூஸ் சார்பாக தொடர்புகொண்டு உதயநிதி காலில் விழ வேண்டிய அவசியம் என்னவென்று கேட்டோம்.



அப்போது பேசிய அவர், “உதயநிதியை பார்த்ததும்  எமோஷனல் வந்துவிட்டது, உதயநிதிதான் எங்கள்  கடவுள். அதுமட்டுமின்றி அவரை என் அப்பா, அண்ணன் போல் நினைத்து காலில் விழுந்தேன் என்றார்.


மேலும் படிக்க | ஒற்றைத் தலைமை விவகாரம் - எடப்பாடி பழனிசாமி மீது பாய்ந்தது வழக்கு


அடுத்ததாக கடவுள் இல்லை என்ற கொள்கையின் அடிப்படையில் வளர்ந்த கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடவுள் ஆகிவிட்டாரா என்று ஜீ தமிழ் நியூஸ் சார்பாக கேட்கப்பட்டபோது, இனி உதயநிதிதான் எல்லாம் என்று சொல்லிவிட்டு ஃபோனை துண்டித்துவிட்டார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR