பிஞ்சுப் பிள்ளைகளின் பொதுத்தேர்வுகளை நீக்கிய அரசுக்கு நீக்கமற நன்றி என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அதற்கேற்ற வகையில், சிறப்பு வகுப்புகளை நடத்தி, மாணவர்களை தயார்படுத்தி வந்தன. அதேவேளையில், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பினரும், அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.


இந்நிலையில், 5ஆவது மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு அரசாணையை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அறிவிப்பை வெளியிட்டார்.  எனவே, ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்’ என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது.


அந்தவகையில் தற்போது இதற்கு பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்று வந்த நிலையில் தற்போது கவிஞர் வைரமுத்து இது குறித்து டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 


 



 


பிஞ்சுப் பிள்ளைகளின் பொதுத்தேர்வுகளை நீக்கிய அரசுக்கு நீக்கமற நன்றி. பட்டாம்பூச்சிகளின் சிறகிலிருந்து பாறாங்கற்களை அகற்றியதற்குப் பாராட்டுக்கள் என்று தெரிவித்திருந்தார்.