5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அதற்கேற்ற வகையில், சிறப்பு வகுப்புகளை நடத்தி, மாணவர்களை தயார்படுத்தி வந்தன. அதேவேளையில், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பினரும், அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.


இந்நிலையில், 5ஆவது மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு அரசாணையை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அறிவிப்பை வெளியிட்டார். இவரின் இந்த அறிவிப்பு மாணவர்களை இயல்பு நிலைக்கு மீண்டும் கொண்டுவந்துள்ளது. இதை தொடர்ந்து, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. 



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... "படுக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானது என்று அகரம் தனது களப்பணியில் உணர்ந்திருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்க்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது. 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி" என அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.