தொடரும் தினகரனின் அதிரடி: அதிமுக-வில் நடப்பது என்ன?
கடந்த சில நாட்களாக அதிமுக அம்மா பேரவை பொறுப்பில் இருந்து பலரை தினகரன் அதிரடியாக நீக்கி வருகிறார். இந்நிலையில் இன்று மேலும் சிலரை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று அவர் தெரிவித்துள்ளதாவது:
அ.தி.மு.க அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து கோகுல இந்திரா நீக்கி அவருக்கு பதிலாக நடிகர் செந்தில் நியமிக்கப் பட்டுள்ளார்.
இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்து ப.குமார் எம்.பி. நீகப்பட்டுள்ளார்.
மகளிர் அணி செல்யலாளர் பொறுப்பில் இருந்து கீர்த்திகா முனுசாமி நீகப்பட்டுள்ளார்.
மேலும் அம்மா பேரவை இணை செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.எஸ். ஆர் ராஜவர்மன் நீகப்பட்டுள்ளார்.
அனைத்துலக எம்.ஜிஆர் மன்ற இணை செயலாளராக கோனேஸ்வரன் நியமிக்கப் பட்டுள்ளார்.
முன்னதாக ஆகஸ்ட் 23 அன்று காலை ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.பி.உதயகுமாரை நீக்கி அவருக்கு பதிலாக மாரியப்பன் கென்னடி மாற்றம் செய்யப்பட்டுடார். மேலும் விருதுநகர் மாவட்டம் பொருளாளர் பொறுப்பிலிருந்து அழகர்சாமி நீக்கம் செய்யப்பட்டார்.
கரூர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீக்கப்பட்டார், அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார்.
அதற்கும் முன் அதிமுக அம்மா பேரவை அணியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து வைத்திலிங்கத்தை நீக்கியாதாக டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளுக்கு எதிராக நடந்து கொண்டதால் இவர்களை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார்.