திமுக ஆட்சிக்கு வந்ததும், அரவக்குறிச்சியில் 25,000 ஏழை குடும்பங்களுக்கு 3 செண்ட் நிலம் இலவசமாக வழங்கப்படும்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தேர்தல் முடிவு வெளியாகும் 23 ஆம் தேதி அதிமுக ஆட்சி தானாகவே கவிழும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நான்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இடைதேர்தளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, இறுதிக்கட்ட பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதியில் ஈடுபட்டார். அப்போது, திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக, வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். காலையில், தடாக்கோவிலில் பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், அரவக்குறிச்சியில் 25,000 ஏழை குடும்பங்களுக்கு 3 செண்ட் நிலம் இலவசமாக வழங்கப்படும் என்றார்.


மேலும், சூலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மீண்டும் உறுதி அளித்தார். ஏற்கனவே பலமுறை ஸ்டாலின் ஜெ.மரணம் குறித்து மீண்டும் விசாரிக்கப்படும் என்றும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், தற்போதைய ஆறுமுகசாமி கமிஷனில் உண்மை வெளியாக வாய்ப்பில்லை. எனவே உண்மை வெளி வரவேண்டுமெனில் சி.பி.ஐ., விசாரணை தேவை என்று கூறி வந்த நிலையில், தற்போது சூலூரில் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.


இதை தொடர்ந்து, திருப்பரங்குன்றம் தி.மு.க வேட்பாளர் சரவணனுக்கு, விரகனூரில் உதயநிதி ஸ்டாலின் ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகிவிட்டனர் என்றார். மேலும், ஜூன் 3 ஆம் தேதி ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.