ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா சேலம் தலைவாசலில் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்த முதலமைச்சர் பின்னர் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடைய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீர்வரத்தை பொறுத்து படிப்படியாக 10 ஆயிரம் கன அடி வரை நீர் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார். 


திருப்பதி ஏழுமலையான் அருளாள் மேட்டூர் அணை 100 அடியை எட்டியுள்ளதாகவும், பருவமழை பொழியவில்லை என வருத்தப்பட்ட நிலையில் மழை பெய்ததாகவும் கூறினார். விவசாயிகளுக்கு தேவையான உரம் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும், விவசாயிகள் சூழ்நிலையை புரிந்த சிக்கமாக தண்ணீர் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். 


காவிரியில் கொள்ளிடம் அணை வரை 3 தடுப்பணைகள் அமைக்கப்படும் என்றும் ஏற்கனவே ஒரு அணை கட்டப்பட்டு வரும் நிலையில் மற்றொரு அணைக்கான பணி தொடங்கிவிட்டதாகவும் தெவித்தார். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிச்சம் நிறைவேற்றப்படும் என கூறிய முதலமைச்சர், அதன் மூலம் 125 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும் என கூறினார். 


ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலம் தலைவாசலில் அமைக்கப்படும் என்றும், மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்கள் கான்கிரீட் கால்வாய்களாக மாற்றப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.