ADMK தொண்டர்கள் ஆளக்கூடிய கட்சி; இதில் அனைவரும் தலைவர்: EPS
எடப்பாடியில் சரபங்கா ஆற்றில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்!!
எடப்பாடியில் சரபங்கா ஆற்றில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்!!
சேலம் மாவட்டம் எடப்பாடியை 2ஆக பிரிக்கும் வகையில், நகரின் மத்தியப் பகுதியில் சரபங்கா ஆற்றின் மறுகரையில் உள்ள கவுண்டம்பட்டி, சக்திநகர் உள்ளிட்ட பகுதி மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக மிகுந்த சிரமத்துக்கு இடையே ஆற்றினை கடந்து, மறுகரையில் உள்ள வெள்ளாண்டிவலசு, நைனாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனர்.
இதையடுத்து, தமிழக அரசு கவுண்டம்பட்டியிலிருந்து சேலம் பிரதான சாலையை இணைக்கும் வகையில் ரூ.2கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைத்திட நிதி ஒதுக்கி அனுமதி அளித்தது. இந்நிலையில், புதிய பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் பயன்பாட்டுக்கு இன்று திறந்துவைத்தார். சுமார் ரூ.1.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்தினால் 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்; அதிமுக தொண்டர்கள் ஆளக்கூடிய கட்சி; இதில் எல்லாருமே தலைவர்கள் தான். நாங்கள் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம்; அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்குறுதியின்படி கவுண்டம்பட்டியில் இருந்து நயினாம்பட்டி வரை ஆற்றுப்பாலம் கட்டித்தரப்பட்டுள்ளது.
உயிரிழப்பினை தடுக்க, எரிபொருள் சிக்கனம், சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய அரசு 8 வழிச்சாலை திட்டத்தினை கொண்டு வந்துள்ளது. அ.தி.மு.க. பலம் பொருந்திய கட்சியாக உள்ளது. அ.ம.மு.க.விற்கு சென்றவர்கள் அ.தி.மு.க.விற்கு திரும்பி வருகின்றனர். சேலத்தில் கட்டப்பட்ட புதிய ஈரடுக்கு மேம்பாலத்தினால் மக்களின் போக்குவரத்து சிரமம் குறைந்திருக்கிறது. இதனால் 35 சதவீத போக்குவரத்து நெரிசல் குறையும். மாணவர்கள், நோயாளிகள் அதிக பலனடைவார்கள். நில எடுப்பினால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் பாலங்கள் கட்டப்படுகின்றன.
மேலும், அதிமுகவில் கோஷ்டி பூசல் உள்ளதாக கூறப்படுவது தவறான தகவல். ராஜன் செல்லப்பாவின் பேட்டியை பார்த்த பிறகே அது பற்றி கருத்து கூற முடியும். மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு விழாவில் திமுகவினர் பங்கேற்கவில்லை. குற்றம்சாட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாலம் திறப்பு விழாவில் திமுகவினர் பங்கேற்றனர்" என அவர் தெரிவித்தார்.