டி.டி.வி. தினகரன் சசிகலாவை சந்திப்பதற்காக இன்று சென்னையிலிருந்து பெங்களூரு புறப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தினகரனுடன், வெற்றிவேல், இன்பதுரை, பார்த்தீபன், தங்க தமிழ்செல்வன், ஜக்கையன், கதிர்காமு உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் சசிகலாவை சந்திக்க உள்ளனர். 


இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் நடவடிக்கை குறித்தும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்தும் சசிகலாவுடன் தினகரன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


முன்னதாக டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-


எதிர்கால செயல்பாடு குறித்து அறிவுரை பெற சசிகலாவை சந்திக்க செல்கிறேன். எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் தலையிட விரும்பவில்லை. பயத்தால் தான் அமைச்சர்கள் என்னை விலக சொன்னார்கள். அம்மா அணி என்பது ஒன்றுதான். அதிமுக ஒன்றாக செயல்பட பாடுபடுவேன். கட்சி, ஆட்சியை பாதுகாக்க தொண்டர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.