கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்வை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரையில் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும். அதன் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கிய வைபோகம் இன்று நடைபெற்றது. 


பச்சைப் பட்டு உடுத்தி, அலங்காரம் செய்யப்பட்ட கள்ளழகர் வெள்ளிக் குதிரையில் எழுந்தருளினார். இன்று காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என்று பக்தர்கள் ஆரவாரம் எழுப்பினர். லட்சக்கணக்கான பக்தர்கள் இதனைக் காண குவிந்திருந்தனர். 


பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை மூன்றுமாவடிக்கு வந்தார். அப்போது எதிர்சேவை நடைபெற்றது. பின்னர் கண்டாங்கி பட்டு, வேல் கம்பு ஆகியவற்றுடன் பக்தர்கள் வழிபட்டனர். 


இந்நிலையில் மதுரையில் சித்திரைத் திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கிய வைபோக நிகழச்சியின் வீடியோ:-