மதுரையில் கோயில் திருவிழா நடன நிகழ்ச்சியின் போது மேடையிலேயே நாட்டியக் கலைஞர் ஒருவர் உயிரிழந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மதுரை மாவட்டம் வண்டியூரில் மாரியம்மன் கோவிலில் பிரசித்திப் பெற்றது. ஆண்டுதோறும் இந்த மாதத்தில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இல்லாமல் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. தற்போது கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால், வண்டியூர் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளாக திருவிழாவைக் காணாத பக்தர்கள் அதிகளவில் திரண்டனர். கோவில் நிர்வாகமும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழா நடைபெறுவதால் வழக்கமான நிகழ்ச்சிகளைவிட கூடுதலாக நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். 
இந்நிலையில், கடந்த 23ம் தேதி புதன்கிழமை இரவு மதுரை திருமோகூர் பகுதியைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் காளிதாஸ் தலைமையில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ‘ஜெல்லி’ மீன்களால் பறிபோன நீச்சல் வீராங்கனையின் கனவு.!


இதில் குழந்தைகள், சிறுமிகள் அற்புதமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். மேடையில் இருந்தபடியே காளிதாஸும் ஆடிக்கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்த காளிதாஸ் திடீரென பாடலின் இடையில் ஆட்டத்தை நிறுத்தி அமைதியாக நிற்கிறார். பின்னர், தண்ணீர் கேட்டு குடித்துவிட்டு நெஞ்சைப் பிடித்தபடி நாற்காலியில் அமர்ந்தார். நாட்டிய நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. பாடல் முடிந்த பின்னும் காளிதாஸ் இருக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விழா ஏற்பாட்டாளர்கள் அவரைத் தட்டி எழுப்பினர். அப்போதுதான் மேடையிலேயே காளிதாஸ் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த காளிதாஸின் குடும்பத்தினர் மற்றும் பரதக் கலை மாணவர்கள் கண்ணீருடன் அவரது சடலத்தை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. காண்போரை கண்கலங்கச் செய்யும் இந்த வீடியோவைப் பார்த்த பலர், ‘நடனமாடிக் கொண்டிருக்கும்போதே உயிரைவிட்ட இந்தக் கலைஞருக்கு எங்கள் மரியாதை’ என்று பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR