பணத்துக்காகக் கொலை செய்யும் கொடூரம் இதுவே கடைசியாக இருக்க வேண்டும்: ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய புதிய சட்டத்தைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கிராமத்தில் கல்லூரி மாணவர் சூர்யா வசித்து வருகிறார். இவர் பெரம்பலூரில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் வேப்பூரைச் சேர்ந்த பட்டாத்தாள் என்ற 75 வயது மூதாட்டியைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான அந்த மாணவர் பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த மூதாட்டியைக் கொலை செய்து, அவரிடமிருந்து நகையைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
விசாரணையில், நகைக்காக மூதாட்டியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மாணவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும், புதிய சட்டத்தைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க | பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்குக் கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் 38 கோரிக்கைகள்
அதில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதற்காக மூதாட்டியைக் கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளை அடித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. இத்தகைய கொடூரம் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சோகம் இதுவரை நடந்து வந்தது. இப்போது பணத்துக்காகக் கொலை செய்யும் கொடூர நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்கியிருப்பதிலிருந்தே ஆன்லைன் சூதாட்டம் இன்னும் கொடிய வடிவம் எடுப்பதை அறிய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிப்பதன் மூலம்தான் தற்கொலைகளையும், இளைய தலைமுறையினரின் சீரழிவையும் தடுக்க முடியும். அதற்காக உடனடி நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு ஆகும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் முன்னேற்றம் இல்லாமல் கிடக்கிறது. அதில் சாதகமான தீர்ப்பும் கிடைக்காது. எனவே, ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய புதிய சட்டத்தைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | தனித்துவ அடையாளங்களை சிதைத்தழிக்கிறது பாஜக" கொதித்தெழும் சீமான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G