1400 ஆண்டுகள் கடந்து நிற்கிறது சென்னைக்கு அருகில் உள்ள ஒரு கிராமம். வயல்வெளி, கால்நடை மெய்ச்சல், காக்கை குருவிகளின் சத்தம் என இயற்கையின் அழகியலை தன்னுள் கொண்டுள்ள மணிமங்கலம் என்ற கிராமம் மாபெரும் ஒரு வரலாற்றை கையில் ஏந்தி நிற்கிறது.தஞ்சை பெரிய கோயிலும், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி கோயில் என பல வரலாற்று சிறப்பு மிக்க வழிபாட்டு தலங்களை அறிந்திருக்கும் மக்களுக்கு தாம்பரத்திற்கு அருகே உள்ள மணிமங்கலம் பகுதியில் இருக்கும் தர்மேஸ்வரர் கோயிலும், அந்த பகுதியின் வரலாறும் அறிந்திருக்கிறதா. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அருகே மணிமங்கலம் என்ற கிராமம் ஒன்று உள்ளது. கி.பி 640ஆம் நூற்றாண்டில் இந்த பகுதி  சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கா அல்லது  நரசிம்மவர்மப் பல்லவனுக்கா என்ற வகையில் முதல் போர் நடந்தது. அதில் முழுமையான வெற்றி பெறாத சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி பல்லவ நாட்டை நோக்கி இரண்டாவது முறையாக மீண்டும் படையெடுத்தார்.



மேலும் படிக்க | அகழ்வாராய்ச்சி: 5300 ஆண்டு பழமையான மண்டை ஓட்டின் மூலம் வெளியான அதிசய தகவல்!


அதற்கு காஞ்சியிலிருந்து ஒதுக்குப் புறமாக உள்ள மணிமங்கலத்தை நரசிம்மவர்மப் பல்லவன் தேர்வு செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இந்த போரில், சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை எதிர்த்து, பல்லவர்கள் தங்கள் முதல் வெற்றியை பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து சாளுக்கிய மன்னன் பல்லவ நாட்டை நோக்கி இனி ஒரு முறை படையெடுக்கக்கூடாது என நினைத்த நரசிம்மவர்மப் பல்லவ மன்னன் கர்நாடக மாநிலம் வாதாபி வரை சென்று விரட்டி அடிக்க முடிவு செய்து அதிலும் வெற்றி கண்டார்.


சாளுக்கிய  சாம்ராஜ்ஜியத்தின் பெரும் சரிவுக்கு காரணமாக இருந்த மணிமங்கலம் போர் வரலாற்றின் சிறப்பு மிக்க சம்பவங்களில் ஒன்று. இந்த போர் நடந்த அதே இடத்தில் இன்று தர்மேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. ஒரே நேர் கோட்டில் 5 சிவன்கள் இருக்கும் சிறப்பு வாய்ந்த கோயிலும் இந்த மணிமங்களத்தில்தான் இருக்கிறது என்பது அதிலும் சிறப்பு. அங்கு இருக்கும் இந்த சர்மேஸ்வரர் கோயிலுக்கு வெளியில் கல்வெட்டு ஒன்று உள்ளது போர் நடந்ததற்கான சாட்சியங்களை உறுதி செய்கிறது. 


இந்த மணிமங்கலத்திற்கு மேலும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது என்றால் அது வணிக ரீதியான வரலாறு என்று கூறலாம்.ரத்தின கிராமம் என்பது கடல் வணிகர்கள் வாழ்விடத்தை குறிக்கும். எனவே கடல் வணிகர்கள் நிறைந்த ஊராகவும், செல்வந்தர்கள் நிறைந்த ஊராகவும், மணி கிராமம் இருந்துள்ளது.ரத்தினம் உள்ளிட்ட நவமணிகளை விற்கும் வணிகர்கள் இருந்ததால் காலப்போக்கில் அது மணிமங்கலம் என்ற பெயரை பெற்றுள்ளது.


மேலும் படிக்க | 4500 ஆண்டுகள் பழமையான சூரியன் ஆலயம் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது


பின்னர் சோழர் காலத்தில், `லோகமாதேவி சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரைக் கொண்டதாக வரலாறுகள் கூறுகின்றன. நான்கு வேதங்களில் தேர்ச்சி பெற்ற வேத சிரோமணிகளுக்கு இந்த ஊர் தானமாக அளிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும் ராஜசூளாமணி சதுர்வேதி மங்கலம், பாண்டியனை இருமடி வெண்கொண்ட சோழச் சதுர்வேதி மங்கலம், கிராமசிகாமணி சதுர்வேதி மங்கலம் என்றெல்லாம் வெவ்வேறு காலகட்டங்களில் இவ்வூரின் பெயர் மாறினாலும் ஆதிப் பெயரான மணிமங்கலம் என்பதே இன்றும் நிலைத்து நிற்கிறது. 


மேலும் இந்த ஊரின் பழைமைக்கும், பெருமைக்கும், வரலாற்று உண்மைக்கும் சான்றாக ஐந்து கோயில்கள் விளங்குகின்றன. அதில் முக்கியமானது தர்மேஸ்வரர் ஆலயம், அதனை தொடர்ந்து, வையாலேஸ்வரர் ஆலயம், கயிலாசநாதர் ஆலயம், ராஜகோபாலப் பெருமாள் ஆலயம், வைகுந்தப் பெருமாள் ஆலயம் ஆகியவையாகும்.



மேலும் படிக்க | Homo bodoensis: மனித மூதாதையரின் புதிய இனங்கள் கண்டுபிடிப்பு! அசத்தும் விஞ்ஞானிகள்


இந்த கோயில்களில் பூஜை வழிபாடுகள் நடந்தாலும் இன்றும் தர்மேஸ்வரர் ஆலயம் கும்பாவிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது என்பது அப்பகுதி மக்களுக்கு வேதனையளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. இந்த கோயில் தற்போது இந்திய அறநிலையத்துறையின் கண்காணிப்பில் உள்ளது. அங்கு இருக்கும் அமைதி நிறைந்த சூழலும், பல்லவர்களின் கோயில் கட்டுமான கலையும் பார்ப்போரை வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR