சிஏஏவுக்கு எதிராக ஒரு கோடி பேரின் கையெழுத்தை எதிர்பார்த்த நிலையில் 2 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏவுக்கு எதிராக ஒரு கோடி பேரின் கையெழுத்தை எதிர்பார்த்த நிலையில் 2 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும்  மாபெரும் கையெழுத்து இயக்கம்” நடத்தப்படும் என்று கடந்த மாதம் 24 ஆம் தேதி திமுக மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செயயப்பட்டது.  அதைத்தொடர்ந்து பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை  தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றும் என்று அறிவிக்கப்பட்டது. 


இதையடுத்து பிப்ரவரி 2 ஆம் தேதி சென்னை கொளத்தூர் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடையே கையெழுத்து வேட்டை நடத்தி தொடங்கி வைதார். அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தி வருகின்றனர். 


இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஸ்டாலின்.. "சிஏஏக்கு எதிராக 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், 2 கோடி பேர் கையெழுத்து உள்ளனர் என்றும், நாட்டில் நிலவும்  வேலை வாய்ப்பின்மையை திசை திருப்பவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. தெரிவித்து உள்ளார். 


தமிழக மக்கள் மத்திய அரசின் நடவடிக்கை எதிராக இருப்பதை இதன்மூலம் நிரூபித்து உள்ளனர் என்று தெரிவித்து உள்ளனர். நிறைவு நாளான இன்று திருவள்ளூரில் பங்கேற்று கையெழுத்து பெற்றும் திமுக தலைவர் ஸ்டாலி,ன சிஏஏக்கு போராட்டம் தொடரும்" என அவர் தெரிவித்தார்.