சென்னை சேப்பாக்கததில் உள்ள விருந்தினர் மாளிகையின் முன்பு கார்டூனிஸ்ட் பாலா கைது செய்ததை கண்டித்து நடத்திய போராட்டத்தில் அவர் வெளியிட்ட கேலிச்சித்திரம் அடங்கிய பேனர் வைக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்பட்டதாகவும், சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் அதில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறி பாலா மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் பாரதி தமிழன், அசதுல்லா ஆகியோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். 


இந்த வழக்கை கண்டித்து சேப்பாக்கததில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் முன்பு இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட கார்டூனிஸ்ட் பாலா தனது வாய் மற்றும் கைகளில் கருப்பு துணியை கட்டியிருந்தார்.