தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் உடல் நல்லடக்கம்...
தற்கொலைப்படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம்!!
தற்கொலைப்படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம்!!
நேற்று முன் தினம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரமரணம் அடைந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் ஆகியோர் ஆவார். இவர்களது உடல்கள் டெல்லியில் இருந்து இன்று தனி விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த தமிழக வீரரின் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, சிவசந்திரனின் உடல் 21 துப்பாக்கிக்குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதையடுத்து, தூத்துக்குடி சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உடல் விரும்பி விவசாயம் செய்த சொந்த வயலிலேயே 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த தூத்துக்குடி சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரிடம் வழங்கினார் துணை முதல்வர் வழங்கினார்.