சென்னையில் (Chennai)  நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தில், போலீஸார், போனை திருடிய ஒரு பள்ளி சிறுவனுக்கு போனை பரிசாக தந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில், ஒரு சிறுவன் போனை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டான். அது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.


அப்போது சில உண்மைகள் தெரிய வந்தது. அந்த சிறுவன் படிப்பில் ஆர்வம் நிறைந்த ஏழை சிறுவன். 


கொரோனா (Corona) சமயத்தில் கற்பதற்கு ஆன் லைன் வகுப்புகளுக்காக ஸ்மார்ட்போன் அவசியம் என்ற நிலையில், அவனது பெற்றோருக்கு போன் வாங்கித் தரும் வசதி இல்லை. 


மொபைல் போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் அரசுப் பள்ளியில் படிக்கிறார். தந்தை பிஸ்கட் கடையில் வேலை செய்கிறார், தாய் வீடுகளில் வேலை செய்கிறார்.


தன்னால் படிக்க முடியவில்லை என அவன் மிகவும் வருத்தப்பட்டபோது, ​​அதனை இரண்டு உள்ளூர் ரவுடிகள் பயன்படுத்திக் கொள்ள நினைத்தனர்.


மொபைல் போனை பறிக்கும் வேலையில் தங்களுக்கு உதவி செய்தால், சிறுவனுக்கு மொபைல் போன் கொடுப்பதாக அவர்கள் இருவரும் இந்த சிறுவனின் மனதை குழப்பினர்.


காவல்துறையினர் அவர்களைப் பிடித்தபோது, ​​இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சிறுவன் தனது பிரச்சனையை காவல் துறையிடம் விவரித்தான். இதற்குப் பிறகு, காவல்துறை அதிகாரி அவன் கலவி கற்க உதவும் வகையில் தொலைபேசி வாங்கிக் கொடுத்தார்.


இந்த சம்பவம் அனைவர் மனதையும் நெகிழ வைத்துள்ளது.


ALSO READ | Online Games-க்கு தாயின் Rs.90,000-ஐ செலவழித்த சிறுவன்! தந்தை புகட்டிய வினோத பாடம்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


 Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR