சென்னை: தமிழகத்தில் இரவு 9 மணிவரை மட்டுமே பேருந்து சேவை இயக்கப்படும் என மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் (M.R. Vijayabhaskar) தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோயால் நீடித்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாட்டுக்கு பிறகு, தமிழகம் செவ்வாய்க்கிழமை அன்று வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறந்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை (Bus Service) மீண்டும் துவக்கியது. ஞாயிற்றுக்கிழமை பெரிய தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மாநிலத்தில் பொது பேருந்து சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டன.


ALSO READ |  தமிழ்நாட்டில் செப்டெம்பர் 30 வரை ஊரடங்கு, ஈ-பாஸ் முறை ரத்து.. மேலும் விபரம் -படிக்கவும்


ஊரடங்கு (Lockdown) காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொது போக்குவரத்து மீண்டும் மாநிலத்தில் தொடங்கப்பட்டது. மொத்த பேருந்துகளில் 59% மட்டுமே இயக்கப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளைக் கொண்டு, நிலையான இயக்க முறைமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


செப்டம்பர் 1 முதல், இ-பாஸ் (E-Pass) இல்லாமல் மக்கள் தமிழகம் முழுவதும் பயணிக்க முடியும், மாவட்டங்களுக்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று பெரிய அளவிலான தளர்வுகளை அறிவித்து மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்கப்படும், மேலும் தீவிரமான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்காது என்று முதலமைச்சர் கே பழனிசாமி தெரிவித்திருந்தார்.


ALSO READ |  அன்லாக் 4-ல் தமிழகம்: வழிகாட்டுதல்களுடன் இங்கெல்லாம் மீண்டும் சேவை திறக்கப்பட்டது!


இந்தநிலையில், பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை மாவட்டங்களுக்குள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ள நிலையில், மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் (M R Vijayabhaskar), "தமிழகத்தில் இரவு 9 மணிவரை மட்டுமே பேருந்து சேவை இயக்கப்படும்" என அறிவித்துள்ளார்.


தமிழக அமைச்சர்களில் கொரோனா தொற்று பாதித்தவர்களில் மாநில போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.