மத்திய அரசு வெளியிட்ட அன்லாக் IV (Unlock 4) வழிகாட்டுதல்களின்படி, பொது போக்குவரத்து, மால்கள், கிளப்புகள், ரிசார்ட்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்றவை திறக்கப்படும் என தமிழக அரசு (Tamil Nadu Government) அறிவித்தது. நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த இவை அனைத்தும் இனி திறக்கப்படும்.
கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் தமிழக (Tamil Nadu) அரசு முன்னணியில் உள்ளது. கண்ணுக்கு தெரியாத வைரசால் பெரும் அளவில் பாதிக்கப்பட்ட தமிழகம் தற்போது மெதுவாக தன்னை சீர்படுத்திக் கொண்டிருக்கிறது. சமீப தகவல்களின் படி, கடந்த ஒரு நாளில், தமிழகத்தில் 6,000 க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 87 பேர் இறந்தனர். லாக்டௌன் நடவடிக்கைகளை மாற்றி அமைத்து, வழக்கத்தை விட குறைவான பாதுகாப்புகளுடன், வைரஸுடனான முன்னணி போருக்கு அரசு தயாராக உள்ளது.
ALSO READ: Sep 1 முதல் தமிழகத்தில் பொது நூலகங்கள் திறக்கப்படும்: அரசாங்க உத்தரவு!!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palanisamy) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகளில் சில முக்கிய அம்சங்களைக் காணலாம்:
* தனித்தனி SOP மற்றும் குறிப்பிட்ட பக்தர்களின் எண்ணிக்கை வரம்புடன் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும்.
* E-Pass-கள் அகற்றப்பட்டன: சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் குறைக்க, உதகமண்டலம், கொடைக்கானல் மற்றும் பிற சுற்றுலா இடங்களுக்கு வருபவர்களுக்கு ஈ-பாஸ் கட்டாயமாக இருக்கும். உடனடி ஈ-பாஸ் வசதி உள்ளது.
* ஞாயிற்றுக்கிழமைகளில் தீவிர லாக்டௌன் அகற்றப்பட்டுள்ளது. மால்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன. ஆனால் திரை அரங்குகள் மூடப்பட்டிருக்கும்.
* விளையாட்டு மைதானப் பகுதிகள் மற்றும் உடற்பயிற்சி மற்றும் வொர்க்-அவுட்களுக்குப் பயன்படுத்தப்படும் பொது இடங்கள் மீண்டும் திறக்கப்படலாம்.
* மெட்ரோ சேவை செப்டம்பர் 7 முதல் மீண்டும் தொடங்கும். பஸ் சேவைகள் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்படும்.
* கிளப்புகள், ஹோட்டல்கள் மற்றும் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும். ரிசார்ட்கள் மற்றும் பொழுதுபோக்கு கிளப்புகள் நிலையான இயக்க முறைமையுடன் மீண்டும் திறக்கப்படலாம்.
* அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 100% ஊழியர்கள் வருகையுடன் வேலை செய்யலாம். இருப்பினும், வீட்டிலிருந்து வேலை செய்வதே இன்னும் அறிவுறுத்தப்படுகிறது.
* முந்தைய லாக்டௌனின் கீழ் தடைசெய்யப்பட்ட பின்வருபவை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்: பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய ஆடிட்டோரியங்கள், பொதுக் கூட்டங்கள், கடற்கரைகள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள், சுற்றுலா இடங்கள் மற்றும் புறநகர் ரயில்கள்.
* கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். ஹோட்டல் மற்றும் உணவகங்களிலிருந்து பார்சல் சேவைகள் இரவு 9 மணி வரை செயல்படலாம்.
* மதக் கூட்டங்கள், சமூக மற்றும் அரசியல் கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள், கல்வி நிகழ்வுகள் மற்றும் பிற ஊர்வலங்கள் தொடர்ந்து தடைசெய்யப்பட்டுள்ளன.
* அதிகபட்சமாக 75 பேருடன் திரைப்பட படப்பிடிப்பு நடத்தப்படலாம்.
ALSO READ: தமிழ்நாட்டில் செப்டெம்பர் 30 வரை ஊரடங்கு, ஈ-பாஸ் முறை ரத்து.. மேலும் விபரம் உள்ளே..!!