மழை வருமா?.... வராதா?.... இன்றைய வானிலை முன்னறிவிப்பு...
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது.அதே போல் திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணியில் 1செ.மீ மழை நேற்று பதிவானது.
சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ்,குறைந்தபட்ச வெப்பநிலையாக 30டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.