பிரம்மாண்டமாகத் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி
Chennai Chess Olympiad : 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டலில் நாளை தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் இன்று தொடங்கியது. தேசிய கீதத்துடன் விழா தொடங்கியதும், அனைத்து நாட்டு செஸ் வீரர்களும் தங்களது நாட்டின் கொடியை ஏந்தி அரங்கத்தில் கம்பீர நடையிட்டு அணிவகுப்பு நடத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார். பின்னர் தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் படிக்க | பிரதமர் முதல் சூப்பர்ஸ்டார்வரை - களைகட்டிய செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா
இதனை முன்னிட்டு, அரங்கம் முழுவதும் கண்கவர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. போட்டியில் கலந்துகொள்ளும் பல்வேறு நாட்டு வீரர்கள், தங்கள் நாட்டு கொடிகளை ஏந்தி அணிவகுப்பாக வந்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கண்களை கட்டிக் கொண்டு இரு கைகளில் பியானோ வாசித்து லிடியன் நாதஸ்வரம் காண்போரை வியப்பில் ஆழ்த்தினார்.
கற்காலம், இரும்புகாலம் தொடங்கி சேரர்கள், சோழர்கள் மற்றும் பாண்டிய மன்னர்களின் வரலாறு, தமிழர் கலைகள், கண்ணகியின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், கமல்ஹாசனின் குரலில் கலைஞர்களால் தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டப்பட்டன. லேசர் வடிவில் அரங்கேற்றம் செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், காட்சிகள் முப்பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டன.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற எஞ்சாய் எஞ்சாமி பாடலை, பாடகி தீ செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பாட, கலைஞர்கள் அதற்கேற்ப நடனமாடினர். செஸ் ஒலிம்பியாட் சுடரை தமிழக செஸ் வீரர் விஸ்வாதன் ஆனந்த். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினிடம் அளித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ