தருமபுரியில் விவசாய பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்சிக்காக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசும் போது, ‘தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் ஒரு கருத்துச் சொன்னார். அதில், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாக கூறினார். தமிழகம் முதல் இடத்தில் செல்ல வேண்டும் என்பது எங்களது ஆசை. இதற்காக அரசு என்ன செய்ய வேண்டும் என்றால், பனை, தென்னை, ஈச்சமரத்திலிருந்து பதனீராகவும், கள்ளாகவும் இறக்கி குடிக்கலாம் என்ற அனுமதியைத் தர வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இன்று முதல் உயரும் சரக்கு விலை; ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி!


அதுமட்டுமல்லாமல், இதனை விற்பதன் மூலமும், மதிப்புகூட்டு பொருளாக மாற்றுவது மூலமும் பெரும் லாபம் ஈட்ட முடியும். உள்ளூரிலும் வெளி நாடுகளிலும்  சந்தைப்படுத்தினால், நட்சத்திர விடுதிகளிலும், விமான நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டால்,  தமிழகத்தில் பொருளாதாரம் உயர்ந்து தமிழகம் முதல் மாநிலமாக திகழும். தற்போது கி.வீரமணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெரியார் பற்றி எடுத்துரைத்தார். ஆனால் பெரியார் கள் இறக்க ஆதரவாளர். ஆனால், கி.வீரமணி, தனது பரப்புரையில் கள் இறப்பது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர் பேசவில்லை என்றாலும் பரவாவில்லை. எங்களுக்கு மேடையில் ஆதரவு கொடுக்க வேண்டும். 


மேலும் படிக்க | வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த முதியவர் கைது!


பெரியார் கொள்கை என கூறும் அவர், கள்ளுக்கு ஆதரவாக பேசவில்லை என்றால் அவர் இருக்கும் பொறுப்பிலிருந்து விலக  வேண்டும். அரசியல் அமைப்பு சட்டப்படி, கள் உணவு பொருள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரும் அரசியில் அமைப்பு சட்டப்படிதான் முதல்வாரகி உள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்கும் கடமை அவருக்கு உள்ளது. இதனால் அவர் அரசியில் அமைப்பு சட்டப்படி கள் இறக்க அனுமதிகொடுக்க வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்கவில்லை என்றால் முதலராக இருப்பதற்கே தகுதயில்லை’ என்று தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR