முகாந்திரம் இல்லை - ஆ.ராசா மீதான வழக்கு தள்ளுபடி
ஆ.ராசாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பியும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா கலந்துகொண்டார். அப்போது இந்து மதம் மற்றும் இந்து பெண்கள் குறித்து அவர் தவறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து ராசா மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பாஜகவினர், இந்து அமைப்பினர் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர். ஆனால் ஆ.ராசா அதற்கெல்லாம் அசரவில்லை.
இந்தச் சூழலில் சர்ச்சையாக பேசிய ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி , மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும், ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.
வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், ஆளுங்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் ராசா மீதான புகாரை காவல் துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.எனவே ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
மேலும் படிக்க | திமுகவினர் சர்ச்சையாக பேச இதுதான் காரணம் - அண்ணாமலை குற்றச்சாட்டு
இந்த மனு இன்று நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான காவல் துறை தரப்பு வழக்கறிஞர், ஜோசப்பின் புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை விசாரணை நடத்தி ராசா மீது நடவடிக்கை எடுக்க எந்தவித முகாந்திரமும் இல்லை என அறிக்கை அளித்ததாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜோசப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் வேண்டுமானால் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என கூறினார்.
மேலும் படிக்க | சிவாஜி கணேசன் சொத்துக்களில் பங்கு கோரிய பிரதான வழக்கின் விசாரணை தள்ளிவைப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ