திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வலதுபக்க கால் தொடையில் இருந்த நீர்க்கட்டியை அகற்ற சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அப்பல்லோ அறிக்கை..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், கடந்த ஒருவருட காலமாக தொடர் பிரச்சாரங்கள் மற்றும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு நேற்றிரவு வருகை தந்தார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.


சிறுநீரகத் தொற்றுக்கான வழக்கமான பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு வந்ததாகவும் பரிசோதனை முடிந்து உடனடியாக வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஸ்டாலினுக்கு வலதுபக்க கால் தொடையில் இருந்த நீர்க்கட்டியை அகற்ற சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அப்பல்லோ அறிக்கை வெளியிட்டுள்ளது. 



கடந்த வருடம், ஜூலை மாதம் இடது கண்ணில் ஏற்பட்ட கண்புரை பாதிப்பின் காரணமாக கண்புரை அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.