பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தருவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் DMK மனு...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியதை அடுத்து, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா மத்திய அமைசரவையில் ஒப்புதல் பெற்றது. பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.


இதையடுத்து, இந்த மசோதா கடந்த ஜனவரி 14 ஆம் தேதி குஜராத்தில் அமலுக்கு வந்தது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த திட்டம் அமலுக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த திட்டத்திற்கு பல பகுதிகளில் எதிர்க்கு தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில், தமிழகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு திட்டத்திற்கு தனது எதிர்ப்பினை  தெரிவித்து வந்தார். தற்போது, பொருளாதார அடிப்படையில் நலிந்த பொதுப்பிரிவினரக்கான 10 சதவீதம் இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரான என்று திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 


குடியரசுத் தலைவர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் மனதில் கொண்டு அரசியல் ஆதாயாத்திற்காக இந்த இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது என்று மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.